மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கவிருந்த தம்பதியினர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைவஸ்து பொருட்களை விநியோகிக்கவிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட தம்பதியர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பம்பலப்பிட்டியவில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

விசாரணையின்போது குறித்த தம்பதியினர் கடந்த பல வருடங்களாக போதைவஸ்து விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்களிடம் இருந்து 284.5 கிராம் கஞ்சா கலவைக்கொண்ட புகையிலை,1.9 கிலோ புகையிலை போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் கொழும்பின் புறநகர் ஒன்றை சேர்ந்த 23 மற்றும் 26 அகவையைக் கொண்டவர்களாவர்.