Kilinochchi NET

எப்படி இருந்த ரம்பா இப்படி மாறிட்டாங்க..குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம்..!!

ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட நடிகை ரம்பா 1992ல் ‘Aa Okkati Adakku’ என்ற தெலுங்குப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின்னர் 1993ல் பிரபு, பானு ப்ரியா நடித்த உழவன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன்பின் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். பெரிதாக தமிழ் படங்கள் எட்டும் கிடைக்கவில்லை. பின்னர் 1996ல் இயக்குனர் சுந்தர்.சி முதன் முதலில் இயக்கிய ‘உள்ளதை அள்ளித்தா’ படத்தின்மூலம் கதாநாயகியாக நடித்தார். இப்படம் இன்றளவிலும் மக்களிடம் பேசப்படும் படமாக உள்ளது.இதன்பின் பல படங்களில் நாயகியாக நடித்த இவர் ரஜினியுடன் அருணாச்சலம், கமலுடன் காதலா காதலா, அஜித்துடன் ராசி, விஜய்யுடன் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சாரக்கண்ணா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.

தமிழில் விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக இருந்தார். இதுமட்டுமின்றி கன்னடா, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, போஜ்புரி மற்றும் ஆங்கில மொழி படத்திலும் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்தபின் 2010ல் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் தமிழ், தெலுங்கில் தொலைகாட்சி டான்ஸ் ஷோக்களில் நடுவராக பங்கேற்றார். இவருக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆன் குழந்தை என மொத்தம் மூன்று குழந்தைகள். தற்போது இவர் தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்டாவில் பதிவேற்றியுள்ளார்.

இதில் சற்று குண்டாக உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நடிகை ரெம்பாவா இது, எப்படி இருந்தவங்க இப்படி மாறிட்டாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.