பத்து வயது பாடசாலை மாணவனை தரையில் தூக்கி அடித்த மூன்று பிள்ளைகளின் தந்தை

பாடசாலை மாணவனை தரையில் தூக்கி அடித்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரை தாம் இன்று கைது செய்துள்ளதாக பொகலந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை பிரதேசத்தில் தமிழ் பாடசாலை ஒன்றில் 5 தரத்தில் கல்வி பயிலும் 10 வயதான இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக சண்டையில் மாணவனின் தந்தை காயமடைந்துள்ளார்.

நேற்றிரவு தாக்குதல் நடத்திய மாணவனின் வீட்டுக்கு சென்று மாணவனை தூக்கி தரையில் அடித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவன் நேற்றிரவு பொகவந்தலாவையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைக்குள் இந்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையின் பின்பு பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும் கண்டித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்தே மாணவனின் வீட்டுக்கு சென்ற சந்தேகநபர் மாணவனை தாக்கியுள்ளார்.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.