Kilinochchi NET

தொகுப்பாளினி டிடியின் ஆசையை நிறைவேற்றுவாரா அந்த நடிகர்?

விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர் டிடி. நடிகர்களுக்காக என்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது போல டிடிக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2.2 மில்லியன் மற்றும் ட்விட்டரில் 2.2 மில்லியன் ரசிகர்கள் இருப்பதே அதற்கு சாட்சி.

டிடி தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினை பேட்டி எடுக்கவேண்டும் என ஆசை தெரிவித்து உள்ளார். இன்று உதயநிதிக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறி உள்ளார் அவர்.

பல வருடங்களுக்கு முன்பு காபி வித் டிடி ஷோவில் உதயநிதி பங்கேற்ற வீடியோவை பதிவிட்டு இருக்கும் டிடி கூறி இருப்பதாவது.. “எளிமையான, ஸ்வீட்டான மற்றும் தற்போது வளர்ந்துவரும் அரசியல் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை சம்பாதித்து கொண்டிருக்கிறீர்கள்.” “உங்களை இன்டர்வியூ செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என டிடி கூறி இருக்கிறார்.

அவரது இந்த ஆசையை உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.