Kilinochchi NET

சீரியல் நடிகையுடன் சூப்பர் இடத்திற்கு சென்றுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்- எங்கே பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் எல்லாம் சூப்பராக ஓடுகிறது. சன்-விஜய் தொலைக்காட்சிகளின் சீரியல்களுக்குள் தான் கடும் போட்டியே நிலவுகிறது.

வாரா வாரம் சீரியல்களுக்குள் TRP ரேட்டிங்கில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. அப்படி TRP போட்டிகளில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சீரியல் நீண்ட மாதங்களுக்கு பிறகு தொலைக்காட்சியின் நம்பர் 1 தொடராக வர அதை கொண்டாடினார்கள்.

இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற வேடத்திற்கு இதுவரை 3 பேர் மாறிவிட்டார்கள், இரண்டாவதாக ஐஸ்வர்யாவாக நடித்து வந்தவர் தீபிகா.

இவரது முகத்தில் மேக்கப் போடுவதால் அலர்ஜி ஏற்பட சீரியலில் இருந்து வெளியேறினார். சீரியலில் நடிக்கும் போது உடல் நடித்த சரவணன் உடன் நல்ல பழக்கம் ஏற்பட இருவரும் இப்போது ஒன்றாக இணைந்து வெளியே செல்வது என இருக்கிறார்கள்.

அண்மையில் இருவரும் ஈஷா யோகா இடத்திற்கு சென்று புகைப்படம் எடுக்க அதை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அதைப்பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.