Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது பாலிவுட் திரையுலகம் பக்கம் கவனம் செலுத்து துவங்கியுள்ளார். இவருடைய நடிப்பில் சில மாதங்களுக்கு முன் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் ஹிந்தியில் வெளியானது. ராஜி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சமந்தாவிற்கு, சில பாராட்டுக்கள் வந்திருந்தாலும், பல எதிர்ப்புகள் வந்தது.
இந்நிலையில் மீண்டும் தற்போது பாலிவுட் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தவுள்ள சமந்தா, அங்கு பட வாய்ப்புகளை கேட்டு வருகிறாராம். அதற்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கிறேன் எனவும், நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்கவும் பிரச்சனை இல்லை எனவும் பாலிவுட்டில் கூறி வருகிறாராம் சமந்தா. இதனால், விரைவில் சமந்தாவிற்கு அங்குள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்புகள் வரக்கூடும் என்று தெரிவிக்கின்றனர்.
இதற்காக விரைவில் சமந்தா ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு குடியேறவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படி, பாலிவுட் திரையுலகில் வாய்ப்புகளை தேடி வரும் சமந்தா, கதைக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும் பணத்துக்காக அப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதனை கேட்ட திரை வட்டாரங்களில் சிலர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்களாம்.