Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். தற்போது 50 லட்சத்தில் சம்பளம் வாங்கும் ரகுல் அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது பிறந்த நாளின் போது தான் காதலித்து வருபவரை அறிமுகப்படுத்தினார். அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னேனி தான். இருவருக்கும் எப்போது திருமணம் என்று பலர் கேள்வி கேட்டு வந்தநிலையில், ரகுல் ப்ரீத் சிங் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
தற்போது என் கேரியரில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அதற்காக தான் நான் நடிக்க வந்தேன். என் தனிப்பட்ட விஷயத்தை நான் கூறியதற்கு காரணம் அது அழகாக இருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச விரும்பாதவள் நானில்லை.
அப்படியிருந்தும் நான் அவருடன் கைகோர்த்து நடந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதற்கு நன்றி. என்னை சிரிக்க வைத்து மகிழ்ச்சியாக பார்த்திருந்ததற்கு நன்றி என்று ஜாக்கிக்கு தெரிவித்துள்ளார் ரகுல். தற்போது அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.