கிளிநொச்சியில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு

கிளிநொச்சியில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

குறித்த செயலமர்வு பூநகரி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆர்.பானுஜா தலைமையில் குறித்த கருத்தரங்கும், செயலமர்வு நடைபெற்றுள்ளது.

குறித்த கருத்தமர்வில் சட்டத்தரணி சண்முகநாதன் வைஷ்ணவி சட்ட ஆலோசனைகளையும், விழிப்புணர்வு கருத்துக்களையும் வழங்கியிருந்தார்.

இதன்போது காணி பிரச்சினை, பாலியல் இலஞ்சம், பாலியல் சுரண்டல், விவாகரத்து, தாபரிப்பு, வன்முறைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகள் மற்றும் குற்றங்களிற்கான தண்டனைகள் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெண்கள், இளைஞர்கள் என 150 பேர் வரை பங்குபற்றியிருந்தனர்.

தொடர்ந்து பெண்களிற்கான ஆளுமை மற்றம் திறன் விருத்திக்கான செயன்முறைப் பயிற்சிகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.