Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
90-கள் முதலே பாலிவுட்டில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்த நடிகை ராணி முக்கெர்ஜீ. பல முன்னனி நடிகர்களுடன் இவர் ஜோடியாக நடித்து தற்போது வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். இந்நிலையில், மணிரத்னம் இயக்கி நடிகர் மாதவன் ஷாலினி நடித்து கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அலைபாயுதே. ப்ளாக்பஸ்டர் ஹிட்டான இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் சாத்தியா என்ற தலைப்பில் 2002-ல் வெளியாகி பாலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டாகியிருந்தது.
சாத்தியாவில் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் மற்றும் ராணி முக்கெர்ஜீ நடித்திருந்தனர். படத்தை ஷாத் அலி இயக்க மணிரத்னம் மற்றும் யஷ் சோப்ரா இணைந்து தயாரித்திருந்தனர். இசைப்புயல் AR ரகுமான் இசையமைத்திருந்தார்.
தற்போது இந்த படத்தில் எப்படி நடிக்க நேர்ந்தது என்பதை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் படத்தின் நாயகி ராணி. அவர் குறிப்பிடுகையில் என் கெரியர் முடிந்துவிட்டது, ராணி அவ்வளவு தான் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துவந்த சமயத்தில் தான் சாத்தியா பட வாய்ப்பு என்னைத்தேடி வந்தது.
சாத்தியாவில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்க என் பெற்றோர் யஷ் சோப்ராவைச் சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர் தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு எனக்கு போன் செய்தார். உன் பெற்றோரை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டேன். சாத்தியா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களை வெளியே விடுவேன் என்றதால் நான் சாத்தியாவில் நடித்தேன் என கூறி அனைவரையும் அ திர்ச்சியில் ஆழ்த்தினார். இவரின் இந்த பேச்சு தான் தற்போது பாலிவுட்டில் பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.