கிளிநொச்சியில் 40 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

கிளிநொச்சி பகுதியில் சுமார் 40 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கிளிநொச்சி வடமராட்சி பகுதியில் இன்று காலை குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.