கிளிநொச்சி மாணவி தேசிய மட்டத்தில் 2ம் இடம்

கிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த மாணவி பிரபாகரன் தமிழ்விழி தேசிய தமிழ்த் தினப் போட்டியின் இலக்கிய திறனாய்வில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடிக்கும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அத்துடன் தேசிய ரீதியில் முதலிடத்தை கொழும்பு றோயல் கல்லூரியை சேர்ந்த சு.அனந்த நாராயணன் சர்மாவும், மூன்றாம் இடத்தை மத்திய மாகாணத்தை சேர்ந்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி பி.லக்சிலாவும் பெற்றுள்ளனர்.