Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

வீதியில் நடந்து சென்ற இளம் நடிகைக்கு ஏற்பட்ட சோகநிலை : பொலிஸார் விசாரணை

பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கே.பி.ஆர். பார்க்கில் வாக்கிங் சென்ற நடிகை ஷாலு சௌராசியாவை தா க்கி செல்போனை பறிக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு நடிகை ஷாலு சௌராசியா ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கே.பி.ஆர். பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி அளவில் வாக்கிங் சென்றிருக்கிறார்.

அப்பொழுது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஷாலுவை மிரட்டி பணம், நகையை கேட்டிருக்கிறார். ஷாலு எதிர்க்கவே அவரை முகத்தில் கு த்திவிட் டார். மேலும் கல்லால் அவரை தா க்க முயன்றார். பின்னர் ஷாலுவின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார் அந்த வாலிபர்.

வாலிபர் தா க்கி யதில் ஷாலுவின் தலை, கண் அருகே காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

பார்க்கில் நடந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஷாலு. அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவானதை சோதனை செய்து வருகிறார்கள். வாக்கிங் சென்ற இளம் நடிகை தா க்கப்பட் டது அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.