Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தற்போதைய தமிழ் சினிமாவில் என்னதான் பல புதுமுக இளம் நடிகைகள் தொடர்ந்து வலம் வந்த போதிலும் அந்த காலத்தில் திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்து வந்த பல முன்னணி நடிகைகள் தற்போதும் மக்கள் மற்றும் பல இளசுகளின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள் எனலாம். சொல்லப்போனால் இன்றும் பல இளைஞர்களின் கனவுகன்னியாக இன்றும் இருந்து வருகிறார்கள் எனலாம்.அந்த வகையில் 90- களின் காலக்கட்டத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருந்த போதிலும்தற்போது பல முன்னணி நடிகைகள் தற்போது சினிமாவில் தொடர்ந்து நடிப்பதை தவிர்த்து இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையிலும் ஒரு சில நடிகைகள் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தொடர்ந்து பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் 90-களின் காலகட்டத்தில் தனது அழகான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல முன்னணி நடிகை சித்ரா.
மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயது முதல் திரையுலகில் நடித்து வருகிறார். பெருமளவு மலையாளத்தில் நடித்து வந்த இவர் தமிழில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இதனை தொடர்ந்து தமிழில் சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்ஜியம், சின்னவர், ஊர் காவலன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி உள்ளார்.
மேலும் இவரை நடிகை சித்ரா என்று அழைப்பதை காட்டிலும் நல்லெண்ணெய் சித்ரா என அழைப்பவர்களே அதிகம் அதற்கு காரணம் விளம்பர மாடலாக ஒரு பிரபல நல்லெண்ணெய் கம்பெனியின் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதன் மூலம் இவருக்கு இந்த அடையாளம் கிடைத்தது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவரது திருமண வாழ்க்கை தான் கேள்விக்குறியானது.
திருமணமான சில வருடங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விவகாரத்தில் முடிந்தது. மேலும் நடிகை சித்ராவிற்கு மகள் ஒருவர் உள்ளார் இருவரும் தற்போது சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தனது வீட்டில் தனித்து வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் தனது வீட்டிற்கு எதிரிலேயே சி.எஸ் சிக்கன் எனும் பெயரில் ஒரு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருவதோடு கல்லாபெட்டியிலும் தானே அமர்ந்து நிர்வாகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.