இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாடு முழுவதும் இன்று இரவு முதல் மழையுடனான சீரற்ற வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம் இதனை கூறியுள்ளது.

இதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.