களுத்துறை – வடக்கும் சிரிலந்த சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பெண் ஒருவரே தப்பிச் சென்றுள்ளார்.
48 வயதுடைய இந்த பெண் தப்பிச் சென்றமை தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண் மதில் இருந்து பாய்ந்து முச்சக்கர வண்டி ஒன்றில் இந்த தப்பிச் சென்றுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.