கொரோனா வைரஸில் இருந்து மேலும் 11பேர் குணமடைவு!

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 3 ஆயிரத்து 140 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதில் 182 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை 37பேர் தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.