வடமாகாண மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் உள்நுழைய முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட வாய்ப்பளிக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, வடக்கில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, இவ்வாறு நாட்டுக்குவரும் நபர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.