Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பிரபல சீரியல் நடிகை ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகியதை குறிப்பிடும் வகையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் “BYE MAHA” என பதிவிட்டிருந்தார்.
இதனால், அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இதுகுறித்த செய்திகள் இணையத்தில் உலா வர தொடங்கின.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’.
இதில், மிர்ச்சி செந்தில் மற்றும் ரச்சிதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மகா-மாயன் ஜோடிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த சீரியலின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
இந்நிலையில் தான் ரச்சிதா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. அவர் ஒரு கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதால் சீரியலில் இருந்து விலகுகிறார் என கூறப்பட்டது.
ஆனால், இதுகுறித்து எந்த விளக்கமும் தராமல் இருந்தார் ரச்சிதா. இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு விடையளிப்பது போல அமைந்துள்ளது அவரது இந்த பதிவு.
இதுகுறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள ரச்சிதா, “படவாய்ப்புகள் வந்ததால் நான் சீரியலில் இருந்து விலகவில்லை.
என்னுடைய Professionalism குறித்து நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அனைவருக்கும் என்னுடைய அர்ப்பணிப்பு குறித்து தெரியும். ஒரு ப்ராஜெக்ட் வந்தால் அதில் என்னுடைய இன்புட்ஸ் எப்படி இருக்கும் என்பது குறித்து நான் சொல்ல வேண்டியதில்லை.
சீரியல் டீம்மில் இருக்கும் அனைவரும் ரொம்ப Friendly. நான் சீரியலில் இருந்து விலக காரணம் அந்த கதையின் போக்கு. அது எனக்கு செட் ஆகவில்லை.
மற்றபடி பெரிய ப்ரோஜெக்ட்டுகளுக்காக நான் சீரியலை விட்டு விலகவில்லை” என தான் சீரியலை விட்டு விலகியதன் உண்மை காரணத்தை கூறியுள்ளார்.