Kilinochchi NET

வீட்டுக்கு சென்று தீபாவளி கொண்டாட போவது இவரா? இந்தவார பிக்பாஸ் 5 எலிமினேஷன் யார் தெரியுமா?

ஆரம்பத்தில் ஸ்லோவாக சென்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போதைய காயின் எடுக்கும் டாஸ்க்கால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்திய வாரத்தில் நாடியா சங், அபிஷேக் ராஜா போன்றவர்கள் வெளியேறினார்கள்.

இதையடுத்து, இந்தவார நாமினேஷனில் இந்த வாரம் அபினை, சின்ன பொண்ணு, வருண், பிரியங்கா, ஸ்ருதி, அக்ஷரா, பாவனி, இமான், இசை வாணி என்று 9 பேர் இருக்கின்றனர். இதில் பஞ்ச தந்திர காயினை வைத்திருந்த இசைவாணி, வருண், பாவானி ஆகிய மூவருக்கும் ஒரு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது.

ஆனால் இதை மூவரும் வாங்க மறுத்தனார். இந்நிலையில் போன வாரமே எலிமினேஷன் செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த சின்ன பொண்ணு இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று வோட்டிங் ரிசல்ட்டில் தெரிய வருகிறது. மேலும் இதன் பின் கடுமையான போட்டிகளை அவரால் சமாளிக்க முடியாது என்பத்தாலும் அவரை வெளியே விடுவார்கள் என்றும் கூறிவருகிறார்கள்.