Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

நீச்சல் உடையில் நஸ்ரியா வெளியிட்ட புகைப்படம், இணையத்தில் வைரல்

சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தாலும் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை என்றால் அது நஸ்ரியா தான்.

ஒரு நாள் கனவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து நஸ்ரியா ஆர்யா மற்றும் நயன்தாரா ஜெய்யுடன் இணைந்து நடித்த ராஜா ராணி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதையடுத்து நிவின் பாலியுடன் நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா, நிக்காஹ் வாயை மூடி பேசு என பல படங்களில் கதாநாயகியாக நடித்த நஸ்ரியா ரசிகர்களின் மனதில் அமர்ந்தார்.

நடிகை நஸ்ரியா நடிகை மட்டுமின்றி பின்னணி பாடகி, தொகுப்பாளர், விளம்பரதாரர் என பல வகைகளிலும் வலம் வருகிறார்.

இப்படி பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பாசிலை திருமணம் செய்து கொண்டார் நமது பிரபல நடிகை. திருமணத்திற்கு பிறகு தமிழ், மலையாளம் என இரு மொழி படங்களில் நடித்தார் நஸ்ரியா.

பொதுவாக நடிகை நஸ்ரியா துளி கூட கிளாமரை காட்டியதில்லை. இந்நிலையில் நடிகை நஸ்ரியாவின் நீச்சல் குளம் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.