Kilinochchi NET

‘பிக்பாஸ் 5’ – இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் டாப்பில் உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இம்முறை பலதுறைகளில் இருந்தும் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சயப்படாத பல பிரபலங்கள் பங்கேற்றனர். ஆனால், தற்போது மக்களுக்கு அவர்கள் பரிட்சயப்பட்டவர்களாக மாறியுள்ளனர்.

இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், சில காரணங்களால் திடீரென இந்த போட்டியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறினார்.

அதையடுத்து நாடியா எலிமினேட் ஆனார். அதையடுத்து 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்தது. இந்த வாரம் போட்டியாளர்கள், சக போட்டியாளர்களிடம் உள்ள குறைகளை வெளிப்படையாக கூறி தங்களின் Opinion-களை கூறி வந்ததால் ஆட்டம் சூடு பிடிக்க துவங்கியது.

இந்நிலையில், இந்தவாரம் 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டார்கள். அதில் இந்தவாரம் எலிமினேட் ஆக போகும் போட்டியாளர் அபிஷேக் ராஜா என தகவல் வெளியாகியுள்ளது