Kilinochchi NET

மஞ்சள் நிற புடவையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்ட போட்டோஸ், ரசிகர்கள் கவர்ந்த கிளிக்ஸ்

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் பகிர்ந்துள்ள புகைப்படம் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மாற்று மலையாள படங்களில் பிசியாக நடித்தது வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் பேஷன் குறித்து வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகும்.

அந்த வகையில் அவர் தற்பொழுது பகிர்ந்துள்ள புகைப்படமும் வைரலாகி உள்ளது. மஞ்சள் நிற புடவையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கவும் வகையில் உள்ளது.

அதனால், பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்தது.

அப்புகைப்படத்தை பகிர்ந்து, “கோடை காலத்தில் மஞ்சள் நிறத்தை விட சிறந்தது எதுவாக இருக்கமுடியும்?” என பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் நடிகர் நிதின் உடன் நடித்த ரங் தே படம் மெகா ஹிட் ஆனதை அடுத்து அவர் தமிழில் நடிகர் ரஜிகாந்த்துடன் ‘அண்ணாத்த’, இயக்குனர் செல்வராகவனுடன் ‘சாணி காயிதம்’, நடிகர் மகேஷ் பாபு உடன் ‘சர்காரு வாரி பட்டா’ மற்றும் நடிகர் தோவினோ தாமஸ் உடன் ‘வாஷி’ போன்ற படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.