Kilinochchi NET

பீஸ்ட் நடிகை பூஜா ஹெக்டேவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துளீர்களா! அன்ஸீன் புகைப்படம்..

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின், பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்த இவர், இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.

மேலும் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதனிடையே இன்று நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அவரின் அன்ஸீன் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

ஆம், பள்ளி சீருடையில் நடிகை பூஜா ஹெக்டே போஸ் கொடுத்துள்ள போட்டோவை நீங்களே பாருங்கள்..