Kilinochchi NET

பிக்பாஸிற்கே தெரியாமல் பிரியங்கா செய்த காரியம் : வைரலாகும் காணோளி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி பிரியங்கா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் சென்று வருகின்றது.

பொதுவாக தொகுப்பாளினி பிரியங்கா தான் இருக்கும் இடத்தில் இருக்கும் அனைவரையும் தனது காமெடி பேச்சினால் வயிறு வலிக்க சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார் என்பது நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரியங்கா சக போட்டியாளர்களை கொமடியில் வைச்சி செய்கின்றார். இதில் இவரிடம் அதிகமாக சிக்கி சின்னாபின்னமாவது இமான் அண்ணாச்சி மற்றும் யாஷிகாவின் நண்பர் நிரூப் இருவருமே.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு அசைவ சாப்பாடு என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். அவ்வாறு எட்டாக்கனியாக இருக்கும் சிக்கனை பிக்பாஸிற்குள் தெரியாமல் வீட்டிற்குள் கொண்டு வந்து அதனை சக போட்டியாளர்களுடன் இருந்து சாப்பிட்டு அசத்திய காமெடி காட்சியினை இங்கு காணலாம்.