கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தால் இரத்ததான முகாம்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தால் இரத்ததான முகாம்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று நடைபெற்றுள்ளது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154ஆவது ஆண்டு நிறைவையொட்டி இலங்கையிலுள்ள உள்ள பொலிஸ் நிலையங்களில், பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரத்ததான முகாம், கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, இரத்த தானம் செய்துள்ளனர்.