Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களும் சரி நடிகைகளும் சரி தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்து பிரபலப்படுத்துவார்கள். அந்த வரிசையில் அப்பா மகனுடன் இணைந்து அம்மாவும் மகளும் நடித்த லிஸ்ட்டினை பார்ப்போம்..
சிவாஜி-பிரபு – தமிழ்சினிமாவின் நடிகர் திலகமான சிவாஜி கணேசன் அவருடன் இணைந்து நடிகை தேவிகா நடித்த படம் ஆண்டவன் கட்டளை. இதையடுத்து அவரது மகன் இளைய திலகம் பிரபு தேவிகாவின் மகளான கனகாவுடன் 1995ல் பெரியவீடு மற்றும் ஜல்லிகட்டுக்காளை போன்ற படங்களில் நடித்தனர்.
மேலும் சிவாஜி கணேசன் லக்ஷ்மி ஜோடி சேர்ந்து நடித்த படம் நெஞ்சங்கள். பின் பிரபு லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவுடன் சுயம்வரம் படத்தில் ஜோடிபோட்டு நடித்தார்.
முத்துராமன் – கார்த்திக் – நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் முத்துராமன் தேவிகாவுடன் இணைந்து நடித்திருப்பார். இதையடுத்து, முத்துராமன் மகன் கார்த்திக்குடன் தேவிகா மகள் கனகா பெரிய வீட்டு பண்னைக்காரன், எதிர்காற்று, கட்ட பஞ்சாயத்து போன்ற படங்களில் ஜோடி போட்டு நடித்துள்ளனர்.
கார்த்திக் – கெளதம் கார்த்திக் – கார்த்திக் மற்றும் ராதா இருவரும் அலைகள் ஓய்வதில்லை வாலிபமே வா உள்ளிட்ட பல படங்கள் ஜோடியாக நடித்தனர். இதையடுத்து கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் மற்றும் ராதாவின் மகள் துளசி சேர்ந்து கப்பல் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்துள்ளனர்.
சிவக்குமார் – சூர்யா – சிவகுமார் நடிகை மேகனா இருவரும் இணைந்து நடித்ததை அடுத்து சூர்யா மேனகாவின் மகள் கீர்த்திசுரேஷுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். இதுபோல் இந்திய சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் தன் வாரிசுகளை நடிக்க வைத்து வருகிறார்கள்.