Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
வைகைபுயலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஜொலித்து வந்த நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக சினிமாவில் பெரியளவில் பேசப்படாமல் இருந்தும் விலகியும் இருந்து வந்தார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் உண்மையை உடைத்துள்ளார்.
அதில்,வடிவேலு திமுக கட்சிக்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனால் அப்போது ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வெற்றி பெற்றார்.
அதன் பிறகு வடிவேலு எந்த ஒரு படத்தில் நடிக்காமல் சினிமாவை விட்டு சிலகாலம் விலகியிருந்தார். இதற்கு பலரும் ஜெயலலிதா அவர்கள்தான் வடிவேலுவை சினிமாவில் நடிக்க விடாத அளவிற்கு சதி செய்திருந்தார் என்று செய்திகள் வெளியாகியது.
ஆனால் இதை முற்றிலும் பயில்வான் மறுத்துள்ளார். அப்போது வடிவேலு திமுக கட்சியில் பணியாற்றிய போது ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார். வடிவேலுவை எப்போதும் ஜெயலலிதா அவர்கள் கருத்தில் கொண்டதே இல்லை,
ஏனென்றால் ஜெயலலிதா அவர்களின் மதிப்பும், மரியாதையும் வேறு, வடிவேலுக்கு கிடைத்த வரவேற்பு வேறு எனவும் அப்படி இருக்கும்போது அவர் அவருக்கு இணையான போட்டியாளர்களை தான் கருத்தில் கொள்வார் இந்த மாதிரி ஒரு காமெடி நபரை எல்லாம் பெரிதும் கண்டுகொள்ள மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
அப்படியிருக்கும் போது வடிவேலுவின் திமிரும், அகராதி குணமும் பேச்சும் தான் அவரை இந்த நிலைக்கு அழைத்துச்சென்றுள்ளது