கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு 2வது சிவப்பு எச்சரிக்கை..!

இலங்கையில் காலநிலை சீரின்மையினால் பல மாவட்டங்களுக்கு 2ம் சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

நாட்டின் எதிர்வரும் 18 மணி நேரத்தில் அதிக கவனம் கொண்ட அவதானிப்புக்குரியதாக மழை பெய்யக் கூடும் என வழிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இப்பிரதேசங்களில் 200 மி.மீ அளவை விட அதிக மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது காற்றின் வேகம் 70-80 ம.கி.மீ வரை வீசக் கூடும்
கடந்த 24 மணி நேரத்தில் அகலவத்தையில் 177.5 மி.மி மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.