Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
நிமிடத்திற்கொரு மரணம்! மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது – யாழ். வைத்தியர் எச்சரிக்கை
நிமிடத்திற்கொரு மரணம் பதிவாவதால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது என யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஹரீஸ்வரன் மக்களை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் காணொளியொன்றை வெளியிட்டுள்ள வைத்தியர் அதில் மேலும், இந்த காலத்தில் கடவுள் கூட உங்களை காப்பாற்ற முடியாது.
ஏனெனில் ஒரு மரணம் இரு மரணம் என்றால் கடவுளால் காப்பாற்ற முடியும். நிமிடத்திற்கொரு மரணம் பதிவாகின்றமையால் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
ஒன்றை மாத்திரம் நிச்சயமாய் கூறுகிறேன். உங்கள் மரணங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு. நீங்கள் தான் காரணம்.
வெளியில் நடமாட வேண்டாம் என கூறும் போது அப்போது தான் வெளியில் நடமாடுவது. பக்கத்து வீட்டுக்காரருக்கு கோவிட் இல்லையென முகக்கவசத்தை கழற்றிவிட்டு கதைப்பது.
வீட்டிற்கு வருகின்றவர்களுக்கு கோவிட் தொற்று இல்லையென தேநீர் கொடுத்து உபசரிப்பது. அத்தோடு கோவிட் தொற்றையும் வாங்கிக் கொள்வது.
நீங்கள் நீங்களாக உணர்ந்து திருந்தாவிட்டால் இறப்பு நிச்சயம். இந்தியாவில் இருந்து காணொளி போட்ட போது பயந்து போய் பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் இன்றைக்கு இலங்கையில் இரகசியமாக அதாவது அம்பலப்படுத்துவது எப்படியென தெரியாமல் நிறைய இறப்புக்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு வார்ட்டிலும் நூற்றுக்கணக்கான மரணங்கள். எனவே நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரட்டை முகக்கவசங்களை பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதுடன், முகக்கவசத்தை கழற்றி வீசும் வரையில் அதன் உள் பக்கத்தை கைகளால் தொடுவதை தவிர்க்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைகளை முறையாக சவர்க்காரமிட்டு கழுவுதல், சமூக இடைவெளிகளை பேணுதல் என்பவை தொடர்பிலும் வலியுறுத்தியுள்ளார்.