Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் விபரம்
கோவிட் தொற்றினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 38 இறப்புகளும், 4885 தொற்றாளர்களில் 2374 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 4885 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 2374 பேர் வீடுகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகிய 3691 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாவட்டத்தில் இதுவரை கோவிட் தொற்றால் 38 பேர் இறந்துள்ளனர்.
அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அமைய சதொச, கூட்டுறவு சங்கங்கள் ஊடாக சீனி நியாய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.39500 கிலோ கிராம் சீனி எமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.