Kilinochchi NET

நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர்! வைத்தியர் வெளியிட்ட தகவல்

நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வைத்தியர் அன்வர் ஹம்தானி இதனை தெரிவித்துள்ளார்.27ம் திகதி வரை 942 கோவிட் நோயாளர்கள் ஒட்சிசனின் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய் தாக்கங்களுக்கு உள்ளான 4,347 பேர் கோவிட்

தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் அன்வர் ஹம்தானி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.