கிளிநொச்சியில் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கியது ஸ்டார் கழகம்

கிளிநொச்சியில் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கியது ஸ்டார் கழகம்

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் ஸ்டார் கழகம் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கியுள்ளது.

இளந்தளிர் கழகத்தினால் அமரர் சுதர்சனினின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி நாடத்தப்பட்ட இந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.

இதில் புதிய சூரியன் கழகமும் ஸ்டார் கழகமும் போட்டியிட்டு ஸ்டார் கழகம் வெற்றிக் கிண்ணத்தை தட்டிக்கொள்ள புதிய சூரியன் இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டது.