கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

மாணவர்களை நல்வழிப் படுத்துதல் மத நிகழ்வுகள் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

பாடசாலைகளும் இம்முறை திருவிழாவுக்காக விடுமுறை வழங்கப்பட்டதன் காரணமாக நூற்றுக்கணக்கான மாணவர்களை கோவில் வளாகத்தில் காணக்கூடியதாக இருந்தது.
தற்போதைய காலத்தில் அறநெறி கல்வி மற்றும் அவரவர் பின்பற்றுகின்ற மத நிகழ்வுகளில் பங்கு பற்றுதல் மிகவும் முக்கியமானது.

மாணவர்களை தீய வழியில் இட்டுச் செல்லும் தென்னிந்திய சினிமா படங்கள், தொலைபேசி பாவனை, சிலருக்கு ஏற்படும் போதைவஸ்து பாவனை எமது சூழலில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். ஆகவே மாணவர்கள் பல பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.

மாணவர்களை நல்வழிப்படுத்துதலில் அவர்கள் பின்பற்றும் மதக் கோட்பாடுகளும் மத நிகழ்வுகளும் மிக முக்கியமான பங்கை செலுத்துவதால் பெற்றோர்களும் கல்வியாளர்களும் மாணவர்களை மத நிகழ்வுகளில் பங்கு பெறுவதற்கு ஊக்குவிப்பதோடு உரிய வகையிலான வசதிகளையும் ஆயத்தங்களையும் செய்து கொடுக்க வேண்டும்.

நேர்த்தியான இளைய சமுதாயத்திற்கு இவை மிகவும் முக்கியமானது.