Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

நாட்டில் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கப்படும் ஊரடங்கு சட்டம் ? முன்னாள் தொற்றுநோயியல் நிபுணர்

ஊரடங்கு இன்னும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் – முன்னாள் தொற்றுநோயியல் நிபுணர்

இலங்கையில், பத்து நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, இன்னும் 10 நாட்களுக்கு நீடிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நாட்டில் தொடர்ந்தும் கண்டறியப்படும் தொற்றுக்கள் மற்றும் இறப்புகளை வெற்றிகரமாகக் குறைக்க, குறைந்தது இன்னும் பத்து நாட்கள், ஊரடங்கு நீடிக்கப்பட வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் தலைமை நிபுணர் நிஹால் அபேசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது நோய்த்தொற்றுகள், இறப்பு, மருத்துவமனைகளில் நெரிசல் மற்றும் வைரசால் பாதிக்கப்படும் சுகாதார ஊழியர்களைக் குறைக்க உதவும் என்று குறிப்பிட்டார்.

கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான ஒரே தீர்வு தடுப்பூசி அல்ல. உதாரணமாக, இஸ்ரேலில், 12 அகவைக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 78% க்கும் அதிகமானோர் தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளனர்.

இருப்பினும், டெல்டா மாறுபாடு பரவுவதால் கோவிட் தொற்றுக்கள் மற்றும் இறப்பு அதிகரித்துள்ளது.

எனவே, ஒரு மீட்டர் தூரத்தைப் பராமரித்தல், கைகளைக் கழுவுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற சுகாதார நடைமுறைகளை, பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் தலைமை நிபுணர் நிஹால் அபேசிங்க இந்த கேட்டுள்ளார்.