கஞ்சா மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும்! ஸ்ரீலங்கா அமைச்சர் விளக்கம்

கஞ்சா மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும்! ஸ்ரீலங்கா அமைச்சர் விளக்கம்

கஞ்சா பயிரில் இருந்து மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தால், அனைத்து ஏற்றுமதி பொருட்களை விட அதிகளவான வெளிநாட்டு அந்நிய செலாவணியை கஞ்சா மூலம் சம்பாதிக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கஞ்சா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவே விஷத்துடன் கூடிய கஞ்சாவை பொது மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்த நேரிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உலகில் உள்ள வேறு நாடுகள் அதிகளவில் கஞ்சாவை ஏற்றுமதி செய்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராக பலமாக மோதியதன் காரணமாக பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையில் கஞ்சாவுக்கு முற்றாக தடைவிதித்தனர் என்பது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், பல்துறை சார்ந்த தொழில்களை எப்படி உருவாக்குவது என்று மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.