Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும்
விட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் இந்த ஊரடங்கு அமுல்செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவின் போது 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.இதன்படி, கீழ் காணும் 19 செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
1. சுகாதார சேவைகள் 2. பொலிஸ் நிலையங்கள் 3. கிராம அலுவலகர்கள் 4. அனைத்து துறைகளைச் சேர்ந்த களவிஜய அதிகாரிகள்5. உள்ளுராட்சி அமைப்புக்கள் ( தேவையான ஆளனியுடன் இயங்க முடியும்)
6. நாளாந்த பயன்பாட்டுக்கான தேவைகள் (மின்சாரம், நீர், தொலைத்தொடர்பு விநியோகம், எரிவாயு விற்பனை நிலையம், பெற்றோல் நிரப்பு நிலையம், மோட்டார் சைக்கிள் திருத்துமிடம், சாலை ,கட்டுமானப் பணி) 7. விவசாயம், கால்நடை மற்றும் மீன்பிடி ( மாவட்ட எல்லைகளைத் தாண்டாது)
8.பலசரக்கு கடைகள், பல்பொருள் அங்காடிகள் ஒன்லைன் விநியோகத்தில் செயற்படல் 9. அத்தியாவசியப் பொருட்கள் விநியோகஸ்தர்கள் 10.வெதுப்பகங்கள் (நடமாடும் விற்பனை) 11. வங்கிகள் (மட்டுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனை)
12. போக்குவரத்து – அத்தியாவசிய / பிற அனுமதிக்கப்பட்ட, நோயாளிகளின் அவசர தேவை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்
13. இறுதிச் சடங்குகள் – 24 மணிநேரத்தில் மேற்கொள்ளுதல், குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் (கொரோனா அற்ற மரணங்களின் போது மாத்திரமே)
14. ஓரே நேரத்தில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற அனுமதிக்கப்படுவர் 15. 65 வயதிற்கு மேற்பட்டோர், நாற்பட்ட நோயாளிகள் மருத்துவ தேவைகளை தவிர்த்து வெளியில் செல்ல முடியாது
16. தனிப்பட்ட கூட்டங்களை நடாத்த முடியாது 17. தினசரி ஊழியம் பெறும் தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் 18. சுற்றுலா தொடர்பான செயற்பாடுகளுக்கு மேலே இருந்து விலக்கு அளிக்கப்படும்
19. மாவட்ட, உள்ளூர் கொவிட் குழுக்களால் தீர்மானக்கப்பட்ட முடிவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.