Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் கோவிட் தொற்றுப் பரவல் தீவிரமாக அதிகரிப்பு

சிறுவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் கோவிட் தொற்று

சிறுவர்கள் மத்தியில் கோவிட் தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்துள்ளது என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

“பெற்றோர் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் கூட, தமது குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.