Kilinochchi NET

கிளிநொச்சி மாவட்டத்தில் 1ம் திகதியில் இருந்து 16ம் திகதி வரை 1246 தொற்றாளர்கள் : மறுஅறிவித்தல் வரை பொதுச்சந்தை பூட்டு

மறுஅறிவித்தல் வரை பொதுச்சந்தை பூட்டு

கிளிநொச்சி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கரைச்சி பிரதேசசபை தவிசாளர் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 31ம் திகதி வரை 1400 தொற்றாளர்களும், இம்மாதம் 1ம் திகதியில் இருந்து 16ம் திகதி வரை 1246 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.