Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
அரசாங்கத்தின் நிர்ணய விலையான 100 ரூபாவிற்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளிடம் அரிசி கொள்வனவு செய்ய வேண்டாம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
100 ரூபாய்க்கு அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அது தொடர்பான வரைபு சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
குறித்த வரைபு எதிர்வரும் திங்கட்கிழமை கிடைத்தவுடன் அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதி பெற்று நாடாளுமன்றத்தில் சட்டமாக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அந்தச் சட்டத்தின் மூலம் 100 ரூபாய்க்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் நபருக்கு 2500 ரூபா முதலிலும், இரண்டாவது தடவை ஒரு லட்சம் ரூபாவும், மூன்றாவது தடவை இரண்டு லட்சம் ரூபாவும் இப்படியாக பத்து லட்சம் ரூபா வரை தண்டப்பணம் அறவிடப்படும்.
அத்துடன், அரிசி உரிமையாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை தண்டம் அறவிடும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.