Kilinochchi NET

பட்டர், நெத்தலி, வெந்தயம், கருவாடு உள்ளிட்ட சில வகை பொருட்களுக்கு விசேட வரி விதிப்பு!

நெத்தலி, வெந்தயம், கருவாடு உள்ளிட்ட சில வகை பொருட்களுக்கு விசேட வரி விதிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சரினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் பட்டருக்கு 880 ரூபா வரியும், ஒரு கிலோ கிராம் கருவாட்டுக்கு 100 ரூபா வரியும், ஒரு கிலோ கிராம் நெத்தலிக்கு 100 ரூபா வரியும், வெந்தயம் ஒரு கிலோ கிராமிற்கு 50 ரூபா வரியும்,

குரக்கன் மா ஒரு கிலோ கிராமிற்கு 150 ரூபா வரியும், கடுகு ஒரு கிலோ கிராமிற்கு 62 ரூபா வரியும், உப்பு ஒரு கிலோ கிராமிற்கு 40 ரூபா வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு 48ம் இலக்க விசேட பொருட்கள் வரி சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு வரி விதிக்கப்பட்டுள்ளது.