Kilinochchi NET

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கு கோவிட் தொற்று உறுதி

கரைச்சி பிரதேச சபை தவிசாளருக்கு கோவிட் தொற்று உறுதி

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அதன் தொடராக அவருடன் தொடர்பிலிருந்த செய்தியாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

தவிசாளரும் இன்று அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.