Kilinochchi NET

கிளிநொச்சி தருமபுரத்தில் தேன் எடுக்கையில் குளவிக்கொட்டி ஒருவர் பலி

குளவிக்கொட்டி ஒருவர் பலி

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதில், நேற்று முன்தினம் (09) மாலை 6.30 மணியளவில் குளவிகொட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே, இவ்வாற உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த நபர், தேன் எடுத்துக் கொண்டிருக்கையில், குளவி கூடு களைந்து, குளவிகள் கொட்டியுள்ளன.

பின்னர், அவர், தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.