Kilinochchi NET

பிணங்களால் நிறைந்தது பிணவறை: அனைத்து மயானங்களையும் 24 மணி நேரமும் திறந்த நிலையில் வைக்க முடிவு

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், களுத்துறை மாவட்டத்தில் அனைத்து மயானங்களையும் 24 மணி நேரமும் திறந்த நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை மருத்துவமனையின் பிணவறைகளில் ஏற்படும் இடப்பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் உதய ரத்நாயக்க கூறுகிறார்.

களுத்துறை அரசாங்க அதிபர் பிரசன்ன கினிகேயுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த முடிவு குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.