Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு
இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறைந்தபட்ச ஊதியம் 10,000இல் இருந்து 16,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2016 ஜனவரி முதல் அமுலுக்கு வந்த 10,000 ரூபா குறைந்தபட்ச ஊதியம் இதுவரை குறைக்கப்பட்டிருக்கவில்லை.
2005 மற்றும் 2016 வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணமாக வழங்கப்பட்ட 3,500 ரூபாவுடன் 12,500 ரூபா வரை அதிகரித்திருந்தது.
அதேபோன்று, அந்த குறைந்தபட்ச ஊதியத்திற்கு வரவு செலவு திட்ட நிவாரண தொகையாக மேலும் 3,500 ரூபா இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தனியார் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 16,000 வழங்கப்பட வேண்டும்.
இந்த தொகைக்கமைய, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் ஒத்துழைப்பும் ஊழியர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.