கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு யாழ்.இந்திய துணைத்தூதுவர் விஜயம்

கிளிநொச்சி- இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு இன்று யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இன்று இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணைத்தூதுவரை ஆராய்ச்சி உதவி ஆணையாளர் கலாநிதி அரகேசரி வரவேற்றார்.

தொடந்து அங்கு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட விவசாய உற்பத்திகளை பார்வையிட்ட அவர், விசேடமாக பல்வேறு நாடுகளிற்கு சொந்தமான திராட்சை செடிகள் உருவாக்கப்பட்டு வெற்றியளித்துள்ளமை தொடர்பிலும் பார்வையிட்டார்.

விவசாய ஆராய்ச்சிக்காக வெவ்வேறு நாடுகளிற்கு சொந்தமான திராட்சை செடிகள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த திராட்சை செடிகள் தொடர்பில் இதன்போது இந்திய துணைத்தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து விவசாய ஆராய்ச்சின் ஊடாக புதிதாக உருவாக்கப்பட்ட மாமரங்கள் நாட்டி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வை தொடர்ந்து திராட்சை உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலும், தெளிவூட்டலும் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.