Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
வவுனியா மாவட்டத்தில் இரு பால்மா வகைகளுக்கு தட்டுப்பாடு : பசு பால் உற்பத்தியினை நாடும் மக்கள்
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இரு பால்மா வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றதாகவும் சில வர்த்தக நிலையங்களில் பால்மா பொருட்களை பதுக்கும் செயற்பாட்டில் ஒர் சில வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிரதான பால்மா வகைக்கும் உள்ளுர் உற்பத்தி பால்மா வகைக்கும் என இரு வகையான பால்மா வகைகளுக்கு வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடுகள் நிலவி வருவதுடன் ஒர் சில வர்த்தக நிலையங்களில் பால்மா இருப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் அதனை பதுக்கும் செயற்பாட்டில் ஒர் சில வர்த்தகர்கள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளமையுடன் தற்போது மக்கள் பசு பால் உற்பத்தியினை கொள்வனவு செய்வதினை ஆர்வம் காட்டியுள்ளமையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பதுக்கல் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரபையினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு அவர்கள் பதிலளிக்கவில்லை
பால்மா தட்டுப்பாடு மற்றும் பால்மா பதுக்கல் தொடர்பில் வடமாகாண பிராந்திய அலுவல்கள் பதில் உதவிப்பணிப்பாளர் திரு. எ எல் ஜவ்பார் சாதிக் அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,
வடமாகாணத்தில் பால்மா உற்பத்தி பதுக்கல் தொடர்பில் 3 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதுடன் வடமாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள எமது அலுவலர்கள் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் பால்மா பதுக்கல் தொடர்பில் எதேனும் முறைப்பாடுகள இருந்தால் அருகேயுள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரபை காரியாலயத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.