Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக வெளிநாட்டில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவரும் பணி இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார்,வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக வெளிவிவகார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் உதவிகள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்கும் இணையத்தில், இலங்கைக்கு வருவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் விபரங்கள் வருமாறு,2020ஆம் ஆண்டில் 2603 பேரும் 2021ஆம் ஆண்டில் 61,603 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
108 பேர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரமுடியாது நெருக்கடி நிலையை எதிர்க்கொண்டிருந்தனர்.அவர்களுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் சட்ட ஆலோசனைகள் இலங்கை தூதுவராலயாத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்படும் வசதிகளுக்கு ஏற்ப வெளிநாடுகளில் இருந்து இலங்கை பிரஜைகள் அழைத்துவரப்படுகின்றனர்.
சுகாதார அமைச்சு, கொவிட் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறது.
சில நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைத்தர விதிக்கப்பட்டிருந்த தடைகள் குறித்து புதிய சுகாதார வழிகாட்டியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சிலரை அழைத்துவருவதற்கான சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக அரசாங்கம் செயல்படுகிறது.
வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களை மீண்டும் அழைத்துவரும் பணியில் தாய்மார்கள், வேலையற்றவர்கள், நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதுடன், நிர்க்கதியாகியுள்ள பணியாளர்களுக்காக 130 மில்லியன் ரூபா மருத்துவ உதவிகளுக்காக ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
வீசா காலம் முடிவடைந்தவர்களுக்கு வீசாவை நீடித்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை வெளிநாடுகளில் இருக்கும் இலங்கை தூதுவராலயங்கள் செய்துள்ளன என்றார்.