கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகள் நியமனக் கடிதங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ளவும் : மேலதிக விபரம் உள்ளே

கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகள்

கிளிநொச்சி மாவட்ட நிர்வாக எல்லைப்பரப்புக்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதங்களை தமக்குரிய பிரதேச செயலகங்களுக்குச் சென்று பெற்றுக் கொள்ள முடியும் என்று கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

60 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்ப்புச் செய்வதற்கான வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2ம் திகதியிலிருந்து 10ம் திகதிக்குள் அவர்கள் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவேண்டும். பட்டதாரிகளுக்குரிய நியமனக் கடிதங்கள் பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலகங்களிலிருந்து நியமனக் கடிதங்களை பட்டதாரிகள் இன்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்று கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் 133 பட்டதாரிகளும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 35 பட்டதாரிகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 47 பட்டதாரிகளும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 52 பட்டதாரிகளும் இணைப்புச் செய்யப்பட்டுள்ளனர்.