Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

வவுனியா தனியார் வங்கியில் இரவு நேரத்தில் திடீரேன ஒளித்த அவசர எச்சரிக்கை மணி : பதட்டத்தில் மக்கள்

வவுனியா தனியார் வங்கியில் இரவு நேரத்தில் திடீரேன ஒளித்த அவசர எச்சரிக்கை மணி : பதட்டத்தில் மக்கள்

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் இரவு 7.30 மணியளவில் திடிரேன ஒளித்த அவசர எச்சரிக்கை மணியினால் அவ்விடத்தில் சற்று பதட்டமான நிலை காணப்பட்டது.

வங்கியின் வாடிக்கையாளர் சேவைகள் நிறைவடைந்து அனைத்து ஊழியர்களும் சென்ற பின்னரான 7.30 மணியளவில் வங்கியிலிருந்து திடீரேன அவசர எச்சரிக்கை ஒளி ஒளித்துள்ளது. இதனால் அவ்விடத்தில் நின்ற மக்கள் பதட்டத்துடன் நின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு விரைவாக தகவல் சென்றதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

வங்கியில் பாதுகாப்பு தொழிநுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ் அவசர எச்சரிக்கை ஒளி ஒளித்திருக்காலம் என வங்கி உத்தியோகத்தர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.