Kilinochchi NET

எல்லா மாவட்டங்களிலும் டெல்டா தொற்றாளிகள் இருக்கக்கூடும்

எல்லா மாவட்டங்களிலும் டெல்டா தொற்று உறுதியாளர்கள் இருக்கக் கூடும் என சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சாதாரணமான வீதத்தில் நோய்த் தொற்று உறுதியாளர்கள் இருக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய்த் தொற்று உறுதியாளர்களின் ஊடாக குறிப்பிட்ட பகுதிகளில் மிக வேகமாக நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே டெல்டா நோய்த் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.